தேங்கிய நீரைக் கவனியுங்கள். படம் எடுங்கள். டெங்குவைத் தடுக்க உதவுங்கள்.
வீட்டிலோ, பாடசாலையிலோ, அலுவலகத்திலோ, வீதியோரத்திலோ நீர் தேங்கிய இடத்தில் அல்லது அதன் அருகில் நுளம்பின் முட்டைகள், புழுக்கள் அல்லது கூட்டுப்புழுக்கள் போல ஏதாவது தென்பட்டதா? அவை என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
கண்டவுடன் பாதுகாப்பான இடத்திலிருந்து தெளிவாகப் படம் எடுங்கள். நீர் தேங்கிய இடம் அல்லது பாத்திரமும் படத்தில் தெரியட்டும். நீரைத் தொடவோ, மாதிரி சேகரிக்கவோ, வீதிக்குள் இறங்கவோ வேண்டாம்.
படத்தை Citizen Science திட்டத்துக்கு WhatsApp வழியாக அனுப்புங்கள். முகங்கள், வாகன இலக்கத் தகடுகள், தனிப்பட்ட விவரங்கள் படத்தில் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த இடம் உங்கள் பொறுப்பில் இருந்தால், பாதுகாப்பாகச் செய்ய முடிந்தால், பயன்படுத்தாத பாத்திரங்களைக் காலி செய்து தேய்த்துக் கழுவுங்கள். சேமிக்கும் நீரை மூடி வையுங்கள். பாடசாலையிலோ அலுவலகத்திலோ பொறுப்பாளருக்குத் தெரிவியுங்கள். படத்தை அனுப்பும் வரை தடுப்பு நடவடிக்கையைத் தாமதிக்க வேண்டாம்.
படம் என்பது நீங்கள் கண்டதைப் பற்றிய பதிவு மட்டுமே. அதைக் கொண்டு டெங்கு இருப்பதை உறுதிப்படுத்த முடியாது.
WhatsApp வழியாகப் படங்களை அனுப்பும் வசதி விரைவில்.
WhatsApp வழியாகப் படம் அனுப்புங்கள்
Citizen Science | Dengue Awareness
Spot standing water. Take a photo. Help prevent dengue.
Have you noticed what might be mosquito eggs, larvae or pupae in or near standing water? You could spot them at home, at school, at work or by the roadside. No need to identify them yourself. Suspected sightings are welcome.
From a safe spot, take a clear photo as soon as you notice it. Include the container or spot where the water has collected. Don’t touch the water, collect samples or step into traffic.
Send the photo to Citizen Science on WhatsApp. Keep faces, number plates and private details out of the photo.
If it’s safe and you’re responsible for the area, empty and scrub unused containers and cover stored water. At school or work, tell the person responsible. Don’t wait to send the photo before dealing with standing water.
A photo is a sighting report. It does not confirm dengue.